என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "தலைவர்கள் வாழ்த்து"
சென்னை:
ஈஸ்டர் பண்டிகையையொட்டி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி:-
நியாயமும், சத்தியமும், தியாகமும் என்றைக்கும் மரிப்பதில்லை என்பதை எடுத்துக்காட்டும் விதமாகவே இயேசுபிரானின் உயிர்த்தெழுதல் நிகழ்வு உலகளாவிய கிறிஸ்தவ பெருமக்களால் நம்பப்படுகிறது.
இந்த ஈஸ்டர் நன்னாளில் நாட்டின் மத, இன, மொழி, வேறுபாடுகள் மறைந்து பகைவர்களுக்கும் அருளும் பண்பு மனிதர்களிடையே மிளிர்ந்து அனைவரும் அமைதி, சமாதானத்தோடும், மகிழ்ச்சியோடும் வாழ இயேசு கிறிஸ்துவின் போதனைகளை நெஞ்சில் உறுதியாக ஏற்போம்.
சிறுபான்மையின மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதோடு, நாட்டில் உள்ள அனைத்து மக்களுக்கான வளமான வாழ்வை உருவாக்க இந்நாளில் உறுதியேற்போம். இறைவன் இயேசு கிறிஸ்து அனைவரது உள்ளங்களிலும் புதிய நம்பிக்கையையும், ஒளியையும் ஊட்டுவாராக.
அனைத்து கிறிஸ்தவ சகோதர, சகோதரிகளுக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் ஈஸ்டர் தின நல் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ்:-
சிலுவையில் அறையப்பட்ட இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த திருநாளான ஈஸ்டர் பண்டிகையை கொண்டாடும் கிறித்துவ மக்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஒவ்வொன்றுக்கும் ஒரு காலமுண்டு; வானத்தின் கீழிருக்கிற ஒவ்வொரு காரியத்திற்கும் ஒவ்வொரு நேர முண்டு என்று எல்லாவற்றிற்கும் ஒரு காலம் குறித்து வைக்கப்பட்டிருக்கிறது என்ற விவிலிய வாக்குதத்தின்படி குறித்து வைக்கப்பட்ட நேரத்தில், முக்கியமாக குறித்த காரியம் நடைபெற்றே தீர வேண்டும் என்ற நம்பிக்கை அனைவருக்கும் அருளப்பட்டிருக்கிறது. அதன்படி, மத்தியிலும், மாநிலத்திலும் நல்லாட்சிகள் தொடருவதற்கான தீர்ப்பை தமிழ்நாட்டு மக்கள் வாக்கு எந்திரங்களில் எழுதியிருக்கிறார்கள்.
தீயவர்களால் சிலுவையில் அறையப்பட்டிருந்த இயேசு பிரான் உயிர்த்தெழுந்து வந்தது கிறித்தவர்களுக்கு எத்தகைய மகிழ்ச்சியையும், ஆனந்தத்தையும் அளித்ததோ, அதேபோன்ற ஆனந்தம் அடுத்த 33 நாட்களில் தமிழ்நாட்டு மக்களுக்கு கிடைக்கவிருக்கிறது. அந்த நாளில் தீயவர்கள் வீழ்வது உறுதியாகி விடும்.
மனிதகுல வரலாற்றில் விவரிக்க இயலாத துன்பமும், துயரமும் ஒரு புனித வெள்ளிக்கிழமை அன்று, கொல்கதா எனப்படும் கபால ஸ்தலத்தில் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் நிகழ்ந்தது. நெஞ்சைப் பிளக்கும் அந்த சோக சம்பவம்தான், ரட்சகர் இயேசு பெருமான் சிலுவையில் அறையப்பட்ட அவலம் ஆகும்.
‘நான் உன்னை விட்டு விலகுவதும் இல்லை; உன்னைக் கைவிடுவதும் இல்லை ஒருவனின் தாய் அவனைத் தாங்குவது போல, நான் உன்னைத் தாங்குவேன்’ என்ற உறுதியைத் தரக்கூடிய இந்நாளில், மக்கள் இடையே சமய நல்லிணக்கமும், வாழ்வில் மறுமலர்ச்சியும் ஏற்படக்கூடிய வகையில் அமைந்திட, கிறித்துவப் பெருமக்களுக்கு ஈஸ்டர் திருநாள் வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கின்றேன்.
சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார்:-இயேசு பிரான் ஒரு சராசரி மனிதன் அனுபவிக்கும் துன்பங்களுக்கு மேலான துன்பங்களை அனுபவித்து, இறுதியில் தியாக சுடராக சிலுவையில் அறையப்பட்டு, மூன்றாம் நாள் மீண்டும் அவதரித்து வந்த நாளை, ஈஸ்டர் தினமாக கொண்டாடும் அனைத்து கிறிஸ்துவ சகோதர சகோதரிகளுக்கும் எனது நல்வாழ்த்துக்கள்.
கிறிஸ்தவ முன்னேற்ற கழக தலைவர் ஜோசப் பெர்னாண்டோ:-
இந்த உலகத்திற்கு தூய வாழ்க்கையின் முக்கியத்துவத்தை எடுத்துக் காட்டிய ஏசுபிரான் உயிர்த்த பெரு நாளில் கிறிஸ்தவ மக்கள் அனைவரும் குதூகலத் துடனும், வளமுடனும், வாழ்வாங்கு வாழ வாழ்த்துவதுடன் உன்னை நீ அன்பு செய்வது போல் பிறரையும் அன்பு செய் என்ற ஏசுவின் பொன்மொழிகளை கடை பிடித்து வாழ்வதுடன் நம் வாழ்வில் தியாகம், கருணை, சமத்துவம், சகோத ரத்துவம் ஆகிய நல்பழக்க வழக்கங்களை மேற்கொள்வோம். அனைவருக்கும் ஈஸ்டர் வாழ்த்துக்கள்.
மேலும் பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலனும் ஈஸ்டர் வாழ்த்து தெரிவித்துள்ளார். #easterday
அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி:-
உலக மக்கள் பல தொழில்கள் செய்து வந்தாலும் உழவுத் தொழிலே முதன்மையானதாகவும், சிறப்பு வாய்ந்ததாகவும் போற்றப்படுகிறது. இத்தகையை சிறப்புக்குரிய உழவர் பெருமக்களின் நலன்களைப் பேணிக் காத்திடவும், அவர்களின் வாழ்வு வளம் பெறவும் எம்.ஜி.ஆரும், புரட்சித் தலைவி அம்மாவும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி உள்ளார்கள். அந்த வகையில் நம் இருபெரும் தலைவர்களின் நல்லாசியோடு செயல்பட்டு வரும் அ.தி.மு.க. அரசும், உன்னதத் திட்டங்கள் பலவற்றை செயல்படுத்தி, விவசாயிகளின் நலன் காக்கும் அரசாக செயல்பட்டு வருகிறது.
மக்கள் அனைவருடைய இல்லங்களிலும் பொங்கட்டும் பொங்கல், இதயங்கள் தோறும் தங்கட்டும் இன்பங்கள் என்று மனதார வாழ்த்தி அன்பிற்கினிய தமிழக மக்கள் அனைவருக்கும் எங்களது இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்களை உரித்தாக்கிக் கொள்கிறேன்.
மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன்:-
அறுவடை திருவிழாவான இந்த பொங்கல் நாளிலே, இறைவனுக்கும், உழைத்தோருக்கும், உழைப்புக்கு பக்கபலமாக இருந்த அனைத்து ஜீவராசிகளுக்கும் நன்றியை செலுத்தி, நம்முடைய நாடு மேலும் பல வெற்றிகளை அடைய கூடிய வகையில் இறைவன் நமக்கு அருள வேண்டும் என்ற பிரார்த்தனையுடன் இந்த பொங்கல் விழாவை கொண்டாடுவோம்.
தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன்:-
இந்த பொங்கல் ஆரோக்கிய பொங்கலாக மலர, மருத்துவ காப்பீட்டு திட்டமும், சமூக நீதிப் பொங்கலாக மலர, 10 சதவீத இட ஒதுக்கீடும், அனைவருக்கும் அனைத்தும் கிடைக்கும். தாமரைப் பொங்கலாக, தமிழகத்திற்கு எய்ம்ஸ் கிடைக்கும் தாமரைப் பொங்கலாக தமிழ்ப் பொங்கலாக மலரும், இந்த பொங்கல் தாமரை மலர் போல், அனைவரும் வாழ்வும் மலர பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
தை பிறந்தால் வழி பிறக்கும் என்பதைப் போல, தை பிறந்து ஆட்சி மாற்றம் நிகழ்வதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது.
இந்நன்நாளில் ராகுல் காந்தி பாரதப் பிரதமராக பொறுப்பு ஏற்பதற்கு சபதம் ஏற்று செயல்படுவோம். தமிழர்களின் வாழ்வாதாரத்தோடு பின்னிப் பிணைந்த இந்நன்நாளில் பொங்கல் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச் செயலாளர் தினகரன்:-
விவசாய விரோத திட்டங்கள், விவசாய நிலங்களில் திணிக்கப்படுவால், விவசாயிகள் கொந்தளிக்கும் மன நிலையோடு ஒவ்வொரு நாளும் போராட்ட களத்திற்குள் தள்ளப்பட்டிருக்கும் நிலையில் உள்ளனர். இதனை தடுத்து நிறுத்த வேண்டிய கடமை நம் அனைவருக்கும் உண்டு. ஏனெனில் விவசாயத்திற்கும், உணவு உற்பத்திக்கும் மாற்று இல்லை என்பதை இத்தருணத்தில் உணர்ந்திடுவோம், உணர்த்திடுவோம். பிறக்கும் தை அனைவரின் வாழ்விலும் நல்ல விடியலை ஏற்படுத்தட்டும்.
டாக்டர் ராமதாஸ்:-
அனைவரின் துயரங்களும் தீர வேண்டும்; நாட்டில் நலம், வளம், அமைதி, மகிழ்ச்சி, சகோதரத்துவம் ஆகியவை செழிக்க வேண்டும் என்பது தான் விருப்பம். அதற்கேற்ற வகையில் தைத் திருநாளும், தமிழ் புத்தாண்டும் தமிழக மக்களுக்கு அனைத்து வகையான தீமைகளில் இருந்தும் விடுதலை பெற்றுத்தர வேண்டும். அதற்காக கடுமையாக உழைக்க அனைவரும் இந்நாளில் உறுதியேற்க வேண்டும்.
இன்பத் திருநாள், நம் பண்புத் திருநாள் தை பொங்கல் என்பதால் தாய்த் தமிழகத்தில் வாழும் தமிழர்களுக்கும், தரணி வாழ் தமிழர்களுக்கும், குறிப்பாக ஈழத் தமிழர்களுக்கும் என் இதயம் நிறைந்த இனிய தமிழர் திருநாள் பொங்கல் வாழ்த்துக்களை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.
விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன்:-
பன்னாட்டு நிறுவனங்களின் ஆக்கிரமிப்புகளுக்கு உள்ளாகி வரும் நம் மண்ணை மீட்கவும் நமது வாழ்வாதாரமான விவசாயம் மற்றும் விவசாயப் பெருங்குடிகளின் வாழ்வுரிமைகள் ஆகியவற்றைப் பாதுகாக்கவும், பண்பாட்டுத் தளத்தில் மேலும் சனாதனத்தை நிலைநிறுத்த முயலும் சங்பரிவார் கும்பலிடமிருந்து இத்தேசத்தை மீட்கவும் இந்தப் பொங்கல் திருநாளில் சனநாயக சக்திகள் யாவரும் உறுதியேற்போம் என்று விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வேண்டுகோள் விடுப்பதுடன், உலகம் முழுவதுமுள்ள தமிழ்மக்கள் அனைவருக்கும் எமது மனம்நிறைந்த பொங்கல் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
தை முதல் பேதங்களும், பிணக்குகளும், மோதல்களும், முரண்பாடுகளும் முழுமையாக மறைந்து, நல்லதே நடந்து, ஏழை, எளிய மக்கள் வாழ்வில் உயர வழி பிறந்து, அனைத்து தரப்பு மக்களும் நல்வாழ்க்கை வாழ்ந்து, தமிழ்நாடு வளம் பெற இயற்கையும், இறைவனும் துணை நிற்க வேண்டி தமிழ் மக்களுக்கு பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் முத்தரசன்:-
மேகதாது அணைகட்டு செயல், இயற்கை வளங்கள் மீதான கார்பரேட் ஆதிக்கம், சமூக நீதி கோட்பாட்டை சிதைக்கும் மத்திய அரசின் இடஒதுக்கீட்டு முறை, அரசியல் சாசனத்திற்கே ஏற்பட்டுள்ள ஆபத்து அறிவியலுக்கு பொருந்தாத சாதிய தப்பெண்ணெங்கள் தேசத்தின் புகழார்ந்த பொது துறைகளை சிதைக்கும் செயல், தொழிலாளர் உரிமைகள் மீதான அப்பட்டமான தாக்குதல் என அனைத்தையும் எதிர்த்து போராடி வெற்றிபெற தைதிருநாளில் சபதமேற்போம்.
சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார்:-
தமிழ் மரபை போற்றி பேணும் நாளாக பொங்கல் விழா ஆண்டுதோறும் உலகெங்கும் வாழும் தமிழர்களால் கொண்டாடப்பட்டு வருவது தனி சிறப்பு.
இயற்கையை வணங்கிய தமிழனின் தொன்மையான வரலாற்றை போற்றி நமது கலாச்சாரமும், நாகரிகமும் என்றும் தொடர, தமிழ் இனத்தின் தனிப்பெரும் விழாவான பொங்கல் திருநாளிலே உலகெங்கும் வாழும் தமிழர்களுக்கும், உழவர்களுக்கும் இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீட ஆன்மிக குரு பங்காரு அடிகளார்:-
அனைவருக்கும் பொங்கல் தின நல்வாழ்த்துக்கள், மக்கள் ஆன்மிகத்துறையில் ஈடுபட்டு நல்ல எண்ணம், நல்ல உள்ளம் பெற்று நன்றாக இருக்க வேண்டும். அனைத்து உயிரினங்களும் நல்ல நிலையில் இருக்க வேண்டும். பலபேர் ஒன்று கூடி நல்ல எண்ணத்தோடும், நல்ல வார்த்தையோடும், நல்ல செயலோடும் பொங்கலோ பொங்கல் என்று சொல்லும்போது, உள்ளம் பொங்கும் புன்சிரிப்பாக மாறி அனைவருக்கும் நல்லது ஏற்படும்.
என்.ஆர். தனபாலன்
பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர். தனபாலன்:-
தமிழ் மக்களின் கலாச்சாரமும், பண்பாடும் உலகம் முழுவதும் பரவி ஒற்றுமை ஓங்கி வளர்ந்து, சண்டை சச்சரவுகள் மார்கழி பனியில் கரைந்து பிறக்கிற தை திங்கள் அனைவருக்கும் நல்வழி காட்டி, தமிழர்களின் வாழ்வு ஏற்றம் காணட்டும்.
சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் நாராயணன்:-
இந்த நன்னாளில், கார்காலக் குளிரும், மார்கழி பனியும் விலகி, வாழ்வில் மாற்றம் வருவது போல் உலகத் தமிழர்கள் அனைவர் வாழ்விலும் பொங்கலோ பொங்கல் என பொங்கிடும் பொங்கல் போல் மகிழ்ச்சி பொங்கி நல்லறம் தழைத்தோங்க வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
சாதி, மத வேறுபாடுகளை மறந்து, இன, மொழி பாகுபாடுகளை துறந்து நாம் எல்லோரும் ஓர் இனம் ஒன்று பட்ட தமிழினம் என்னும் உணர்வோடு இந்நாளை சிறப்புடன் கொண்டாடி மகிழ்கின்றோம். தமிழக மக்கள் அனைவருக்கும் உழவர் திருநாளாம் தைப் பொங்கல் திருநாள் மற்றும் திருவள்ளுவர் தினம், ஆகிய திருநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன்.
மேலும் பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ள தலைவர்கள் விவரம் வருமாறு-
பா.ம.க. இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ், பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி, திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, இந்திய ஜனநாயக கட்சி தலைவர் பாரிவேந்தர், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் கார்த்தி சிதம்பரம், நிலத்தரகர் சங்க தலைவர் வி.என். கண்ணன், மனித நேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் தமிமுன்அன்சாரி, தமிழர் தேசிய கழக தலைவர் வேலு. தாஸ் பாண்டியன், தொழில் அதிபர் வி.ஜி.சந்தோசம், கிறிஸ்தவ முன்னேற்ற கழக தலைவர் எஸ்.ஜோசப் பெர்னாண்டோ உள்ளிட்ட பல்வேறு தலைவர்களும் பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளனர். #Pongal
இந்நிலையில் தீபாவளி கொண்டாடும் தமிழக மக்களுக்கு மாநில ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தேமுதிக தலைவர் விஜயகாந்த், பாமக நிறுவனர் ராமதாஸ், பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி, தமாகா தலைவர் ஜி.கே.வாசன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீன் மற்றும் பல்வேறு தலைவர்கள் தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளனர். #DiwaliWishes #TNGovernor #TamilNaduCM
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று தனது 73-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இதையொட்டி அவருக்கு பல்வேறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தவண்ணம் உள்ளனர். சமூக வலைத்தளங்களிலும் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.
பிரதமர் மோடி டுவிட்டரில் வாழ்த்து செய்தி பதிவிட்டுள்ளார். அதில், ‘ஜனாதிபதியின் ஞானம் மற்றும் பல்வேறு விஷயங்களில் அவரது செயல்பாடுகளால் இந்தியா பெரிதும் பயனடைந்திருக்கிறது. நமது சமுதாயத்தின் ஒவ்வொரு பிரிவிலும் அவர் இணைந்திருக்கிறார். அவர் நீண்ட காலம் ஆரோக்கியமாக வாழ நான் பிரார்த்தனை செய்கிறேன்’ என குறிப்பிட்டுள்ளார்.
இதேபோல் பாதுகாப்புத்துறை மந்திரி நிர்மலா சீதாராமன், ஜவுளித்துறை மந்திரி ஸ்மிருதி இரானி, உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் ஜனாதிபதிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பூங்கொத்துடன் வாழ்த்து கடிதம் அனுப்பி உள்ளார். #RamNathKovind
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆசிரியர் தின வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-
ஆசிரியராக பணியை தொடங்கி, தமது கடின உழைப்பினாலும், நற்சிந்தனையாலும் இந்திய குடியரசுத் தலைவராக உயர்ந்து, நமது தாயகத்தின் சிறப்பைத் தரணிக்கு உணர்த்திய தத்துவ மேதை டாக்டர் எஸ்.ராதாகிருஷ்ணன் பிறந்தநாளான செப்டம்பர் மாதம் 5-ம் நாளை ஆசிரியர் தினமாக கொண்டாடும் ஆசிரியர் பெருமக்கள் அனைவருக்கும் எனது உளமார்ந்த ஆசிரியர் தின நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
அத்துடன், இந்நன்னாளில் நல்லாசிரியர் விருது பெறும் ஆசிரியர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். தரமான கல்வியை தமிழ்நாட்டு மாணவர்கள் பெற்றிட வேண்டும் என்ற உயரிய நோக்கில், பல்வேறு திட்டங்களை சீரிய முறையில் செயல்படுத்தி வருகிறது.
ஆசிரியர் பணி சிறக்கட்டும்! அறிவோங்கித் தமிழ்நாடு உயரட்டும்!
ஏழைக்குடும்பத்தில் பிறந்து, ஆசிரியராக பணி செய்து, இந்தியாவின் முதல் குடிமகன் என்ற உன்னத நிலையை அடைந்தவர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன். ஆசிரியர்களுக்கெல்லாம் ஆசிரியர் என்று போற்றப்படும் அவரது பிறந்த நாள் தான் ஆசிரியர் நாளாக கொண்டாடப்படுகிறது.
இந்த நன்னாளில் தமிழக அளவிலும், தேசிய அளவிலும் நல்லாசிரியர் விருது பெறும் அனைத்து ஆசிரியர்களுக்கும் உளமார்ந்த பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழகத்தில் தரமான கல்வி முறை நடைமுறைப்படுத்தப்படுவதும், ஆசிரியர்களுக்கு சிறப்பான பயிற்சி வழங்குவதுடன், அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றப்படுவதும் அவசியம் ஆகும். இவற்றை செய்து முடிப்பதுடன், ஆசிரியர்களின் உதவியுடன் தமிழகத்தில் தமிழ் வழிக் கல்வியை வழங்கவும் இந்த நல்ல நாளில் அனைவரும் உறுதி ஏற்றுக்கொள்ள வேண்டும்.
தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன்:-
ஆசிரியர் தினத்தன்று ஆசிரியர்களை கவுரவிக்கும் மத்திய-மாநில அரசுகள் மாணவ, மாணவிகளின் கல்வி சிறக்கவும், ஆசிரியர் பணிக்கு தகுதி வாய்ந்த ஆசிரியர்களை தேர்வு செய்வதில் நேர்மையான வழிமுறைகளை கையாளவும், ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று த.மா.கா. சார்பில் வலியுறுத்துகிறேன்.
நல்லாசிரியர்களாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு த.மா.கா. சார்பில் வாழ்த்துக்கள், பாராட்டுக்கள். உன்னத மனிதர்களாக, சிறந்த படைப்பாளிகளாக திகழ்கின்ற ஆசிரியர் பெருமக்களுக்கு த.மா.கா. சார்பில் ஆசிரியர் தின நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார். #TeachersDay
அகில இந்திய இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி டுவிட்டரில் கூறியதாவது:-
மு.க.ஸ்டாலின் தி.மு.க. தலைவராக தேர்ந்து எடுக்கப்பட்டதற்கு எனது வாழ்த்துக்கள். அரசியலில் நீங்கள் தொடங்கும் புதிய அத்தியாயம் மகிழ்ச்சியுடன் வெற்றிகரமாக அமைய வாழ்த்துகிறேன்.
தி.மு.க கழகத்தின் தலைவராக எனது சகோதரர் மு.க.ஸ்டாலின் மற்றும் பொருளாளராக துரைமுருகன் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டிருப்பதை மனப்பூர்வமாக வரவேற்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பிலும், என் சார்பிலும் மனம் நிறைந்த நல்வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, கலைஞர் ஆகியோர் அமைத்துக் கொடுத்திருக்கிற அரசியல் பாதையில் மு.க.ஸ்டாலின் பீடுநடை போட்டு தி.மு.க. கழகத்தை வளர்ச்சிப் பாதையில் நிச்சயம் அழைத்துச் செல்வார்.
திராவிட கழக தலைவர் கி.வீரமணி 1944 ஆகஸ்ட் 27-ந்தேதி சேலம் மாநகரில் திராவிடர் கழகம் பிறந்தது. கிட்டதட்ட அதே காலகட்ட நாளில் தி.மு.க.வின் தலைவராக பாசமிகு மு.க.ஸ்டாலின் ஒரு மனதாகத் தேர்வு செய்யப்பட்டது, எத்தகைய வரலாற்று பொருத்தம்.
ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ உலக வரலாற்றில் எங்கும் காணமுடியாத வகையில் திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு தலைவர் பொறுப்பை ஏற்றுள்ள மு.க.ஸ்டாலினுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
திராவிட இயக்கத்தை பாதுகாக்க தமிழ்நாட்டின் நலன் காக்கவும், மாபெரும் இயக்கமாம் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் பொறுப்பை ஏற்கும் தளபதி மு.க.ஸ்டாலின் வெற்றி மேல் வெற்றி குவித்து வரும் காலத்தில் தமிழகத்தின் ஆட்சிப் பொறுப்பினையும் ஏற்று பல்லாண்டு வாழ்க, வாழ்க என வாழ்த்துகிறேன்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், தலைமை பொறுப்பை ஏற்றுள்ள மு.க.ஸ்டாலினுக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது.
தமிழ்நாட்டின் உரிமைகளுக்காகவும், பாட்டாளிகளின் உரிமைகளுக்காகவும், ஒடுக்கப்பட்ட மக்களின் நல்வாழ்வுக்காகவும், சமூக நீதிக்காகவும் மு.க.ஸ்டாலின் வெற்றிப் பயணத்தை தொடர வாழ்த்துகிறோம்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், தி.மு.க. தலைவராக இருந்து அரை நூற்றாண்டு காலம் அந்தக் கட்சியை வழிநடத்திய சமத்துவப் பெரியாரால் கலைஞர் அடுத்த தலைவர் இவர்தான் என அடையாளம் காட்டப்பட்டவர். இந்தியாவிலேயே உட்கட்சி ஜனநாயகத்துக்கு உதாரணமாக திகழும் தி.மு.க.வின் மரபுப்படி இன்று தேர்தல் மூலம் மு.க. ஸ்டாலின் தலைவராக தேர்தெடுக்கப்பட்டுள்ளது பாராட்டுக்குரியது.
தி.மு.க. என்ற மாபெரும் இயக்கத்தின் தலைவராகப் பொறுப்பேற்கும் மு.க.ஸ்டாலின் சமத்துவம், சகோதரத்துவம், ஜனநாயகம் என்ற கொள்கை வெளிச்சத்தில் கட்சியை மட்டுமின்றி வெகு விரைவில் நாட்டையும் வழிநடத்த வாழ்த்துகிறோம்.
த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன்:- இளம்வயது முதல் கடின உழைப்பால், தொடர் பணியால், விடா முயற்சியால் 50 வருடங்களுக்கும் மேலாக பொது வாழ்வில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு செயல்பட்டு வருபவர் மு.க.ஸ்டாலின்.
தி.மு.க.வின் தலைவராக தேர்தெடுக்கப்பட்டு, பொறுப்பேற்றுள்ள மு.க.ஸ்டாலின், பொருளாளராக பொறுப்பேற்றுள்ள துரைமுருகனுக்கு த.மா.கா.சார்பில் உளம் நிறைந்த வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.
தி.மு.க. தலைவராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்கிறார் என்பதை அறிந்து மிக்க மகிழ்ச்சி, வாழ்த்துக்கள். கலைஞரின் வாரிசு என்பது உண்மை. அது ஒரு கூடுதல் தகுதி மட்டுமே! எனக்குத் தெரிந்து 1975-77 அவசர நிலைக்காலத்திலும் அதற்கு முன்பும் அரசியல் பணியாற்றியவர். சிறை சென்றவர். சித்ரவதைக்கு உள்ளானவர். கடந்த பல ஆண்டுகளாகக் கட்சிக்காக கடுமையாக உழைத்துப் பணி ஆற்றியவர். என்கின்ற தகுதிகளின் அடிப்படையில் இன்று கலைஞர் அமர்ந்த நாற்காலியில் அமர இருக்கிறார். அவருக்கு என் வாழ்த்துக்கள்.
புதிய நீதி கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், தி.மு.க வில் அடிமட்ட தொண்டனாக தமது அரசியல் பயணத்தை துவங்கி படிப்படியாக முன்னேறி செயல் தலைவர் பொறுப்பினை ஏற்று மிகவும் சிறப்பாக பணியாற்றி வந்தார்.
எல்லோரிடமும் அன்புடன் பழகும் பண்பாளர். தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழ் அறிஞர் கலைஞர் ஆகியோரின் வழிகாட்டு தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமை பொறுப்பேற்றுள்ள மு.க.ஸ்டாலின் கழகத்தை வலுவோடும், பொலிவோடும் நடத்தி சென்று மேலும் பல சாதனைகளை படைக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.
சமத்துவ மக்கள் கழக நிறுவனர், தலைவர் நாராயணன், முத்தமிழறிஞர் கலைஞர் ஆசியுடன் தி.மு.க. தலைமை பொறுப்பை ஏற்று தொண்டர்களை அரவணைத்து பெருந்தலைவர் காமராஜர், அறிஞர் அண்ணா, கலைஞர் ஆகியோர் வழியில் தமிழகத்தில் நல்லாட்சி நடத்திட வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
இதேபோல் இந்திய ஜனநாயக கட்சி தலைவர் பாரிவேந்தர், மூவேந்தர் முன்னணி கழக தலைவர் சேதுராமன், கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி தலைவர் ஈ.ஆர்.ஈஸ்வரன் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். #DMKThalaivarStalin #MKStalin
மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள ஓணம் வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:
ஆண்டுதோறும் மலையாள மொழி பேசும் மக்களால் வெகு விமரிசையாக கொண்டாடப்படும் திருவோணப்பண்டிகை திருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.
ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப்படும் ஓணத் திருநாளில் மகாபலி சக்கரவர்த்தி வருவது போல் இந்த ஆண்டும் உறுதியாக வருவார். மழையாலும், வெள்ளத்தாலும் பாதிக்கப்பட்ட தன் மக்களின் அவலங்கள் நீங்கி இனி வரும் காலங்கள் இன்புறு காலமாக அமைய உறுதியான வழி அவர் மூலமாக கிடைக்கும் என நம்புகிறேன்.
இயற்கையின் சீற்றத்தால், மழை வெள்ளத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டு இவ்வாண்டு துயரத்துடனே ஓணம் பண்டிகையை வரவேற்க வேண்டிய நிலை கேரள மக்களுக்கு ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் வாழும் மலையாள மொழி பேசும் அனைத்து மக்களுக்கும், கேரள மக்களுக்கும் ஓணம் திருநாள் வாழ்த்துக்களை எனது சார்பிலும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பிலும் தெரிவித்துக் கொள்கிறேன்.
கேரளாவில் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதித்த மக்கள் அனுபவித்த துன்பங்கள், துயரங்கள், சிரமங்கள் நீங்கி மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிடவும், நலமுடன், வளமுடன் வாழவும் இறைவனும், இயற்கையும் துணை நிற்க வேண்டி உலகம் முழவதும் உள்ள மலையாள மொழி பேசும் மக்களுக்கு த.மா.கா. சார்பில் ஓணம் பண்டிகை நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ்:-
கேரளம் மிகப்பெரிய இயற்கை சீற்றத்தை எதிர்கொண்டு, அதிலிருந்து மீண்டு வரும் நிலையில் தான் ஓணம் திருநாள் நாளை கொண்டாடப்பட உள்ளது. மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களில் பெரும்பான்மையினர் இன்னும் வீடுகளுக்குக் கூட திரும்பாத நிலையில் அவர்களால் ஓணம் திருநாளை எவ்வாறு கொண்டாட முடியும் என்பது தெரியவில்லை. ஆனால் ஓணம் திருநாள் உலகம் முழுவதும் உள்ள மக்களுக்கு ஏராளமான பாடங்களைக் கற்றுக் தருகிறது என்பது மட்டும் மறுக்க முடியாத உண்மை.
திருவோணம் திருநாளை மகிழ்ச்சியாகக் கொண்டாடும் நிலையில், இயற்கை வளங்கள் மற்றும் சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், பராமரிக்கவும் அனைத்துத் தரப்பு மக்களும் உறுதியேற்க வேண்டும்.
அன்புக்குரிய மக்களைக் காண வருகை தரும் மகாபலி மன்னனை வரவேற்பதற்காக திருவோணம் திருநாளை கொண்டாடும், தமிழகம் உள்பட உலகம் முழுவதும் வாழும், மலையாள மொழி பேசும் சகோதர, சகோதரிகளுக்கு இதயங்கனிந்த ஓணம் திருநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த நன்னாளில் அன்பு, அறம், அமைதி, சகோதரத்துவம், சமத்துவம், மனிதநேயம் ஆகியவை தழைத்தோங்கவும், அநீதிக்கு எதிராக ஒருங்கிணைந்து போராடவும் அனைத்துத் தரப்பு மக்களும் சபதம் ஏற்க வேண்டும்.
புதிய நீதிக் கட்சியின் நிறுவனர் தலைவர் ஏ.சி.சண்முகம்:-
கேரளாவில் ஏற்பட்ட மழை வெள்ளம், அம்மாநிலத்தையே அடியோடு சீர்குலைத்து விட்டது. தற்போது வெள்ளம் சற்று வடிய துவங்கி, பாதிக்கப்பட்ட பகுதிகளில் சீரமைப்பு பணிகள், நடைபெற்று வருகின்றது. கேரள மக்களும் தங்கள் துயரங்களில் இருந்து, மெதுவாக மீண்டெழுந்து தங்களின் பாரம்பரியம் தடைபட்டு விடாமல், எளிமையாக ‘‘ஓணம் பண்டிகையை’’ கொண்டாடிட வேண்டுமென்று கேட்டுக் கொள்கின்றேன். அனைவருக்கும் ‘‘ஓணம் பண்டிகை’’ நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன். #OnamFestival
பக்ரீத் பண்டிகையையொட்டி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்- அமைச்சருமான ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும் முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறி இருப்பதாவது:-
இறைவனுக்கு அஞ்சிய தூய வாழ்வு வாழ்ந்த பெருந்தகை இப்ராஹிம் அவர்கள் இறைவன் தனக்கு விடுத்த அழைப்பினை ஏற்று, தனது ஒரே மகன் இஸ்மாயிலை பலியிட முன்வந்த உன்னத நாளை நினைவுகூறும் நாள் தான் “பக்ரீத்” எனப்படும் தியாகத் திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது. இறைவனை அஞ்சி, அவரது கட்டளைக்கு ஏற்ப வாழ்வோர் என்றென்றும் நிறை வாழ்வு பெற்றிருப்பார்கள் என்பது தான் இத்திருநாள் நமக்குக் கூறும் பாடம். போற்றுதலுக்குரிய இப்பெருநாளில், இறைவன் திருவுள்ளத்திற்கு ஏற்ப நாம் அனைவரும் வாழ உறுதி ஏற்போம்.
அனைவருக்கும் எங்கள் இதயம் கனிந்த தியாகத் திருநாளாம் “பக்ரீத்” திருநாள் நல்வாழ்த்துகள் உரித்தாகுக.
தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர்:-
மனிதருக்கு மனிதர் சுய தேவைகளை குறைத்து, சிறு தியாகங்கள் செய்து, பிறருக்கு உதவி, மத, மொழி, இனப் பாகுபாடுகளை அகற்றி, சமாதானம், சகோதரத்துவம், சகவாழ்வு என்று நபிகள் நாயகம் காண்பித்த நன்னெறியினை பின்பற்ற இத்தியாகத் திருநாளில் சூளுரைப்போம். மதநல்லிணக்கம் ஒற்றுமை காப்போம். சிறுபான்மை மக்களின் நலன் காத்திட செயல்படுவோம்.
இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் தியாகத் திருநாள் எனும் பக்ரீத் நல்வாழ்த்துக்களை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பிலும், என் சார்பிலும் தெரிவித்துக் கொள்கிறேன்.
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ்:-
தியாகத் திருநாளான பக்ரீத் தியாகத்தை மட்டுமின்றி, ஈகை, மனித நேயம், நல்லுறவு, மாற்றுத் திறனாளிகள் மீதான அன்பு ஆகியவற்றையும் வலியுறுத்துகிறது. பக்ரீத் திருநாளின் போது ஆடுகளை பலியிடும் இஸ்லாமியர்கள் அதை மூன்று பிரிவுகளாக பிரித்து ஒன்றை அண்டை வீட்டார்கள் மற்றும் உறவினர்களுக்கும், மற்றொன்றை ஏழைகளுக்கும் கொடுத்து மூன்றாவது பங்கை மட்டும் தாங்கள் எடுத்துக் கொள்கின்றனர். இது ஈகையையும், நல்லுறவையும் வலியுறுத்துகிறது.
கேரளத்தில் மழைவெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு நிவாரணம் வழங்குவதில் கூட இஸ்லாமிய நாடுகள் தங்களின் ஈகைத் தன்மையை வெளிப்படுத்தியுள்ளன. தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் பக்ரீத் திருநாளை கொண்டாடாமல் அதற்கான செலவுக்காக வைத்திருந்த தொகையை கேரளத்திற்கு நிவாரண நிதியாக வழங்கி பக்ரீத் திருநாள் வலியுறுத்தும் தத்துவங்களுக்கு வலிமை சேர்த்துள்ளனர்.
மதசார்பற்ற தன்மையின் பாதுகாப்பில்தான் அனைத்து சமய மக்களின் நல்லிணக்கமும், அமைதி வாழ்வும் நிலைநிறுத்தப்படும். அண்மைக் காலமாக மதவாத சக்திகளால் உருவாக்கப்படும் ஆபத்துக்களை எதிர் கொண்டு முறியடிக்க இத்திருநாளில் உறுதி கொள்வோம்.
தமிழ்நாட்டில் காலங்காலமாக உறவுமுறை கூறி, உணர்வுபூர்வமாக ஒற்றுமையுடன் வாழ்ந்துவரும் முஸ்லிம் பெருமக்கள், இந்நாளில் சகோதர சமயத்தாருடன் விருந்துண்டு மகிழ்ந்து, சமய நல்லிணக்கத்துக்கும் சமூக ஒற்றுமைக்கும் வலுச் சேர்க்க வாய்த்திட்ட இந்நாள் ஒரு பொன்னாள் ஆகும்.
விடுதலைச்சிறுத்தை கட்சி தலைவர் தொல்.திருமாவளவன்:-
‘குர்பானி’ கொடுக்கும் இந்நாளில் ஏழை எளியோருக்கு அன்னமிடும் கடமையை இஸ்லாமியர் நிறைவேற்றுவதுடன் 5 வகை கடமைகளுள் ஒன்றான ‘ஹஜ்’ என்னும் புனிதப் பயணம் செல்லும் கடமையையும் இந்தப் புனித நாளில் இஸ்லாமியர்கள் நிறைவேற்றுகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும். இத்தகைய சிறப்பு வாய்ந்த நன்னாளில் இஸ்லாமியப் பெருங்குடி மக்கள் யாவருக்கும் விடுதலைச்சிறுத்தைகளின் சார்பில் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன்:-
இஸ்லாமிய சமுதாயத்தினர் சாதி, மத, இன, மொழி ஆகிய வேறுபாடுகளை கடந்து அனைத்து தரப்பு மக்களிடமும் ஒற்றுமையோடு பழகுவது சாலச்சிறந்தது.
நாட்டின் ஒற்றுமைக்கும், ஒருமைப்பாட்டிற்கும் பக்ரீத் பண்டிகையும் உந்துதலாக இருப்பது இஸ்லாமியர்களுக்கு பெருமை சேர்த்திருக்கிறது.
இறைப்பற்றிலும், கொண்ட கொள்கையிலும் உறுதியாக இருப்பவர்கள் இஸ்லாமியர்கள் என்பது போற்றுதலுக்குரியது. எனவே பக்ரீத் பண்டிகையை கொண்டாடும் இஸ்லாமிய சகோதர சகோதரிகள் எல்லா வளமும் பெற்று நலமுடன் வாழ இறைவன் துணை நிற்க வேண்டும்.
தே.மு.தி.க. நிறுவன தலைவர், பொதுச்செயலாளர் விஜயகாந்த்:-
இஸ்லாமிய சமுதாயத்தை சார்ந்த அனைவரும், நலமுடனும், எல்லா வளமுடனும், சம வாய்ப்பும், சம உரிமையும் பெற்றிட வேண்டுமென இந்த இனிய நாளில் வாழ்த்துகிறேன். மனித உறவுகள் உன்னதம் பெற்றிட அன்பை விதைப்போம். பல ஆண்டு காலமாக நான் தே.மு.தி.க. சார்பில் இஸ்லாமிய நண்பர்களுடன் இணைந்து, குர்பானி வழங்கி, தியாகத் திருநாளை கொண்டாடி வருகிறேன்.
அதே போல் இந்த ஆண்டு கோயம்பேடு தலைமை கழகத்தில் நாளை மாலை 5 மணியளவில் இஸ்லாமிய சமுதாயத்தை சார்ந்த பெரியோர்கள், தாய்மார்கள், இளைஞர்கள் மற்றும் கழக நிர்வாகிகள், தொண்டர்களோடு குர்பானி வழங்கி பக்ரீத்தை கொண்டாட உள்ளேன். இதேபோல் தே.மு.தி.க. மாவட்ட நிர்வாகிகளும், தொண்டர்களும் குர்பானி வழங்கி “இயன்றதை செய்வோம், இல்லாதவற்கே” என்ற கொள்கையோடு பக்ரீத்தை கொண்டாட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா:-
சகோதரத்துவம், ஒற்றுமையுணர்வு, நிலைகுலையாமை, இரக்கம் மற்றும் தியாகத்தின் செய்தியை நமக்கு உணர்த்தும் திருநாளாக தியாகத் திருநாள் விளங்குகின்றது. இந்தத் திருநாளில் இந்த நற்பண்புகளை வளர்த்துக் கொள்வதற்கும், பிறர் இன்பத்தில் மகிழுறும் மனநிலை ஏற்படவும் நாம் உறுதி எடுத்துக்கொள்வோமாக.
நமது நாட்டு மக்களிடையே சகோதரத்துவமும், அன்பும், கருணையும், இரக்கமும் தழைத்தோங்குவதற்கு இறைவனிடம் பிரார்த்திப்போமாக. கேரளா மக்களுக்கு ஏற்பட்டுள்ள துயரங்கள் நீங்கவும் பிரார்த் திப்போமாக. துயருற்று நிற்கும் அம்மக்களுக்கு நம்மால் முடிந்த அனைத்து உதவிகளையும் செய்வதற்கு முன் வருவோமாக.
உலகெங்கிலும் உள்ள இஸ்லாமியர்கள் கூட்டுத் தொழுகை மேற்கொள்ளுவதுடன், விலங்குகளை இறைவனுக்கு பலியிட்டு பின்னர் அதில் ஒரு பகுதியை தங்களுக்கும், மற்றொரு பகுதியை உறவினர், நண்பர்கள், அண்டை அயலார் மற்றும் ஏழை எளியோர்க்கு அளிப்பது வழக்கமாகும். இருப்பவர்கள் இல்லாதவர்களுக்கு அளிப்பதே ஈகை. இந்த பக்ரீத் ஈகை திருநாள் என்றே இஸ்லாமியர்களால் அழைக்கப்படுகின்றது. ஈகை செய்வதன் மூலம் எல்லாம் வல்ல இறைவனின் பேரன்பை பெறலாம் என்பது இஸ்லாமியர்களின் இறை நம்பிக்கையாகும்.
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் சரத்குமார்:-
"தியாகத்திருநாள்" எனப்போற்றப்படும் இந்தபுனித பக்ரீத் பண்டிகை தினத்தில் உலகெங்கும் வாழும் மனிதர்களுக்கு அமைதியும், மகிழ்ச்சியும் நிரந்தரமாக கிடைக்க வேண்டும் என்று கூட்டு பிரார்த்தனை செய்வோம்.
நபிகள் நாயகத்தின் போதனையை மனதில் கொண்டு உலகெங்கும் சமத்துவம் நிலைத்திட, சகோதரத்துவம் தழைத்திட ஒற்றுமையுணர்வுடன் வாழ்வோம்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் கே.எம்.காதர் மொகிதீன், டாக்டர் அன்புமணி ராமதாஸ், இந்திய ஜனநாயக கட்சி தலைவர் பாரிவேந்தர், எஸ்.டி.பி.ஐ. மாநில தலைவர் நெல்லை முபாரக், அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழக தலைவர் டாக்டர் சேதுராமன், அகில இந்திய ஹஜ் அசோசியேசன் தலைவர் ஏ.அபுபக்கர், தமிழ்நாடு முஸ்லிம் லீக் கட்சி தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா உள்ளிட்டோர் பக்ரீத் வாழ்த்து தெரிவித்து உள்ளனர். #Bakrid
சுதந்திர தினத்தையொட்டி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த்:-
இந்திய நாட்டில் படித்த, படிக்காத இளைஞர்களுக்கு வேலையில்லாத் திண்டாட்டம், விலைவாசி உயர்வு உள்ளிட்டவற்றால் வாழ்க்கைச் சுமை அதிகரித்த வண்ணம் உள்ளன. இவையெல்லாம் வருங்காலத்தில் மாற்றம் அடைந்து ஒரு முன்னேற்றகரமான சூழ்நிலை உருவாகி அமைதியும், முன்னேற்றமும் அனைத்து மக்களுக்கும் ஏற்படவும், வகுப்பு ஒற்றுமை ஓங்கவும், வறுமை ஒழியவும் இந்த சுதந்திர நாள் வழி வகுக்கக்கட்டும் என தே.மு.தி.க. சார்பில் எனது இனிய சுதந்திரதின வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
பா.ம.க. நிறுவனத் தலைவர் டாக்டர் ராமதாஸ்:-
இந்தியாவின் 72-வது விடுதலை தினத்தை நாளைக் கொண்டாடும் தமிழ்நாடு உள்ளிட்ட ஒட்டுமொத்த இந்திய மக்களுக்கும் எனது விடுதலை நாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்களை சீரழிக்கும் சக்திகளாக மதுவும், புகையும் மாறி வருகின்றன. இவற்றை உயிர்க்கொல்லிகளாக பார்த்து தடை செய்ய வேண்டிய மத்திய, மாநில அரசுகள் இவற்றை வருவாய் ஆதாரங்களாகப் பார்ப்பது கொடுமையிலும் கொடுமையாகும்.
நடத்துவதோ சாத்தியமல்ல. இந்த அரசை தூக்கி எறிந்துவிட்டு மக்கள் நலன் காக்கும் அரசை அமைப்பதன் மூலமாக மட்டுமே சமத்துவமான, ஊழல் இல்லாத, மது மற்றும் புகையற்ற தமிழகத்தை உருவாக்க முடியும். எனவே. அந்த இலக்கை நோக்கி முன்னேற இந்தியாவின் விடுதலை நாளான இந்த நன்னாளில் அனைவரும் உறுதியேற்றுக் கொள்ள வேண்டும்.
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன்:-
நம் சுதந்திர தேசம் எட்டவேண்டிய உயரத்தையும், இலக்கையும் அடைய விடாமலும், தேசத்தின் முன்னேற்றத்தை முடக்க முனையும் தீமைகள் மற்றும் தடைகளாக திகழும் பிரிவினைவாதம், வன்முறை, ஆதிக்க மனப்பான்மை, பொருளாதார ஏற்ற தாழ்வு என அனைத்திற்கும் விடைகொடுத்து, பரிபூரண சுதந்திரத்தை கருத்தாகவும், நாம் காணும் காட்சியாகவும், அனைத்து நிலைகளிலும் அமைத்திடுவோம்.
நாட்டின் பாதுகாப்புக்கும், மக்களின் சுதந்திரமான பாதுகாப்பான வாழ்விற்கும், அரசும், பொது மக்களும் தங்களுக்கான பங்களிப்பை சிறப்பாக மேற்கொள்வோம் என்று உறுதிமொழி ஏற்றுக் கொண்டு ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். மேலும் சுதந்திர தினத்தை கொண்டாடும் தமிழ் மக்கள் ஒன்றுபட்டு செயல்பட்டு வளமான தமிழகத்தையும், வலிமையான பாரதத்தையும் ஏற்படுத்த முன்வர வேண்டும்.
இந்தியக் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன்:-
பல கனவுகளோடும், கற்பனைகளோடும் விலை மதிப்பற்ற பல்லாயிரக்கணக்கான இன்னுயிர்களை ஈந்து பெற்ற இவ்விடுதலை நன்நாளில், அனைவருக்கும் சுதந்திரதின நல்வாழ்த்துக்களை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துக் கொள்கிறது.
இந்தியாவை காப்பாற்ற, இந்தியர்கள் ஒன்றுபட்டு நின்று, வெறியூட்டுகிற தீய சக்திகளிடமிருந்து நாட்டையும், நாட்டு மக்களையும், அரசியல் சட்ட அடிப்படைகளையும் காப்பாற்ற சங்கற்பம் மேற்கொள்ளுமாறு அனைவரையும் கேட்டுக் கொள்கிறது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன்:-
எல்லோருக்கும் எல்லாமும் கிடைக்கிற, சாதி, மத, பாலின பேதமில்லாத இந்தியாவை உருவாக்க வேண்டும் என்ற தியாகிகளின் கனவை நனவாக்க இந்த நாளில் சூளுரை மேற்கொள்வோம்.
சுதந்திரம் எங்கள் பிறப்புரிமை என்ற முழக்கத்துடன் போராடி விடுதலை பெற்றோம். கருத்துரிமை எங்கள் பிறப்புரிமை என்று உரத்து முழங்க வேண்டிய காலமிது. ஜனநாயகம், மதச்சார்பின்மை, மக்கள் ஒற்றுமை, கருத்துரிமை காத்து நிற்க இந்த சுதந்திரத் திருநாளில் உறுதியேற்போம்.
பா.ம.க. இளைஞர் அணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ்:-
வறுமையையும், ஊழலையும் ஒழிக்காமல் நாட்டை முன்னேற்ற முடியாது. இந்த இரு தீமைகளும் ஒழிக்கப்படும் நாளில் தான் இந்தியா, குறிப்பாக தமிழ்நாடு முன்னேற முடியும். எனவே, வறுமையையும், ஊழலையும் வளர்த்தெடுக்கும் பினாமி ஊழல் அரசை அகற்றி, நல்லாட்சி அமையும் நாள் தான் தமிழக மக்களுக்கு உண்மையான விடுதலை நாள் ஆகும். அந்த இலக்கை நோக்கி பயணிக்கவும், அதற்காக கடுமையாக உழைக்கவும் இந்த நன்னாளில் நாம் அனைவரும் உறுதி ஏற்றுக் கொள்வோம்.
மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா:-
சோதனைகளை கடந்து அனைத்து மக்களுக்கும் சுதந்திரத்தின் நற்பலன் சென்றடைய அனைவரும் பாடுபட இந்த சிறப்பான நாளில் உறுதி எடுத்துக் கொள்வோமாக. கருத்துச் சுதந்திரம், சுற்றுச்சூழல் தூய்மையை காக்கும் சுதந்திரம், பெரும் முதலாளித்துவ வணிக அடிமைத்தனத்திலிருந்து சுதந்திரம் முதலியவற்றை அனைத்து மக்களும் அனுபவிக்கும் வகையில் ஜனநாயக ரீதியில் அரசமைப்புச் சட்டம் காட்டும் வழியில் சளைக்காமல் உழைக்க இந்த திருநாளில் உறுதி எடுத்துக் கொள்வோமாக.
சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார்:-
நாடு முழுவதும் அமைதி நிலவ ஒற்றுமையுடனும், சகோதரத்துவத்துடனும் சாதி, மத, இன, மொழி பேதம் உள்ளிட்ட வேற்றுமைகளை களைந்து புதிய சமத்துவ சமுதாயம் உருவாக உழைப்போம். இந்த இனிய சுதந்திர திருநாளில் உலகெங்கும் வாழும் இந்தியர்களுக்கு என் சார்பிலும், சமத்துவ மக்கள் கட்சியின் சார்பிலும் சுதந்திரத் திருநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.
தமிழ்நாடு வர்த்தக காங்கிரஸ் தலைவர் எச்.வசந்த குமார், கார்த்தி சிதம்பரம், இந்திய ஜனநாயக கட்சி தலைவர் பாரிவேந்தர், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி தலைவர் ஈஸ்வரன், கோகுலம் மக்கள் கட்சி தலைவர் எம்.வி.சேகர், இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழக தலைவர் தேவநாதன், வி.ஜி.சந்தோஷம், ஜனதா தளம் மாநில தலைவர் ராஜகோபால் உள்ளிட்ட தலைவர்கள் சுதந்திர தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். #IndependenceDay
ரம்ஜான் பண்டிகை நாளை கொண்டாடப்படுவதையொட்டி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலின்:-
தங்களுடைய மெய்வருத்தி நோன்பிருந்து, அன்பு, இரக்கம், கருணை, ஈகை எனும் மானுடத்தின் மிக உயர்ந்த பண்புகளை தமது செயல்பாடுகளின் மூலம் வெளிப்படுத்தும் இஸ்லாமிய மக்கள் அனைவருக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ரமலான் திருநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஆட்சியிலிருந்த போதும், எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருக்கும் போதும் இஸ்லாமிய சமுதாய மக்களுக்காக எப்போதும் அயராது பாடுபடும் இயக்கத்தின் சார்பில் ஆற்றிய சாதனைகள் எண்ணிலடங்காதவை.
இஸ்லாமிய மக்களின் நலனுக்காகவும், முன்னேற்றத்திற்காகவும், அவர்களின் வாழ்க்கைத்தரம் அனைத்து வகையிலும் மென்மேலும் உயர்ந்திட வேண்டும் என்ற உன்னத நோக்குடனும் செயல்பட்டு வரும் திராவிட முன்னேற்றக் கழகம் சிறுபான்மையின மக்களின் சமூக, கல்விபொருளாதார முன்னேற்றத்திற்காக என்றைக்கும் உற்ற துணையாக விளங்கிடும் என்று உறுதியளிக்கிறேன்.
தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர்:-
நபிகள் நாயகம் வழியில் ஜக்காத் என்னும் ஏழை வரியை பொது நிதியங்களில் செலுத்தி, ஏழை, முதியவர், விதவைகளுக்கு மாத உதவி, மருத்துவ, கல்வி, திருமண, உணவு மற்றும் தொழில் துவங்கும் உதவி என அனைத்து உதவிகளையும் செய்வதற்கு இம்மாதம் உதவுகிறது.
நோன்பு உடலையும், உள்ளத்தையும் புனிதமாக்குகிறது. இப்புனித நாளில் இஸ்லாமிய பெருமக்கள் அனைவரின் வாழ்விலும் நலமும், வளமும் பெருகிட அனைவருக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி சார்பில், இனிய ரமலான் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
தே.மு.திக. தலைவர் விஜயகாந்த்:-
பசியின் கொடுமையை உணர்ந்து கொள்ளவும், உடல்நலத்தை பேணிக்காத்து மனிதர்களை மேம்படுத்துவதுதான் இந்த புனித ரமலான் நோன்பின் சிறப்புகள். புனித நோன்பினை முடித்துக் கொண்டு ரம்ஜான் திருநாளைக் கொண்டாடும் இந்த இனிய நாளில் அன்பு ஓங்கிட, அறம் தழைத்திட, சமாதானம் நிலவிட, சகோதரத்துவம் வளர்ந்திட வேண்டுமென இஸ்லாமிய பெருமக்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த ரம்ஜான் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
அம்மா மக்கள் முன் னேற்ற கழக துணை பொதுச் செயலாளர் தினகரன்:-
புரட்சி தலைவி அம்மா இஸ்லாமியர்களின் அரணாகத் திகழ்ந்து. அவர்களின் நன்மைக்காக முன்னெடுத்து நடைமுறைப்படுத்திய திட்டங்கள் அனைத்து உலகத்தின் கவனத்தை ஈர்த்தவை. தமிழகத்தில் தழைத்தோங்கிவரும் இந்த சகோதரத்துவம் என்றும் நிலைத்திட செய்யவும், இந்திய நாட்டின் மதச்சார்பற்ற கொள்கையை பாதுகாத்திடும் அரணாகவும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்றும் திகழ்ந்திடும்.
இந்நன்னாளில் இறைத் தூதர் நபிகள் நாயகம் போதனைகளை தொடர்ந்து கடைபிடிப்போம். போற்றிடுவோம்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன்:-
பண்பாட்டு ரீதியாக இஸ்லாமியர்கள் உலகம் முழுவதும் ஒற்றுமையாக அணி திரள்வதற்கு ரமலான் நோன்பு ஏதுவாக அமைவதை காணமுடிகிறது. மானுடத்தின் மேன்மையை வலுப்படுத்தும் மனிதநேயம் என்னும் மாண்பினை இது செழுமைப்படுத்துகிறது. சாதி, மத வரம்புகளைத் தாண்டி ஏழை எளியோருக்கு கொடையளிக்கும் கருணையையும் இந்த நோன்பு மேம்படுத்துவதை உணரமுடிகிறது.
இத்தகைய சிறப்புக்குரிய நோன்பை நிறைவுசெய்யும் திருநாளான ரமலான் பெருநாளில் இஸ்லாமியர் யாவருக்கும் எமது நெஞ்சார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன்:-
உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமிய சகோதர- சகோதரிகளுக்கும் அனைவருக்கும் இந்நன்னாளில் எல்லா வளங்கள் மற்றும் நலங்களும் பெற்று எல்லோருக்கும் எல்லாம் கிடைத்திடவும் அன்பான ரமலான் நல்வாழ்த்துக்களை தெரிவித்துகொள்கிறேன்.
புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம்:- நோன்பு காலத்தில் வறுமையில் உள்ள ஏழை எளியோருக்கு உதவி செய்வதை குர்ஆன் வலியுறுத்துகின்றது. இந்த நோன்பு ஏழை, பணக்காரன் என்கின்ற பேதம் கிடையாது. இறைவன் முன் எல்லோரும் சமம் என்பதை இந்த புனித மாதம் தெள்ளத்தெளிவாக்குகின்றது. இந்த இனிய நாளில் இஸ்லாமிய பெருமக்கள் அனைவருக்கும் புனித ரமலான் தின வாழ்த் துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் தெகலான் பாகவி:-
அறுசுவையான உணவுகளை உட்கொண்டு புத்தாடை அணிந்து உறவினர்களுடன் இந்த நன்நாளில் இன்பமுற்று இருப்பது போல வாழ்நாள் முழுவதும் மகிழ்ச்சியுடன் வாழ்வதற்கு எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
ஏழைகளின் கண்ணீரை துடைத்திடுவோம், வறியவர்களுக்கு உதவிடுவோம். மத நல்லிணக்கத்தை காத்திடுவோம் என்று இந்த நன்னாளில் உறுதி ஏற்போம். இஸ்லாமிய சொந்தங்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த பெருநாள் வாழ்த்துக்கள்.
மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி:-
ரம்ஜான் பண்டிகையின் மகிழ்ச்சியே இல்லாதவர்களுக்கு செல்வங்களை கொடுத்து மகிழ்வதுதான். சகோதரத்துவத்தை வளர்த்தல், அன்பை பகிர்தல் என ரமலான் பண்டிகை மனித நேயத்தையும் உணர்த்துகிறது. இதுவே அதன் சிறப்பாகும். இனிய ரமலான் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.
இந்திய ஜனநாயக கட்சி தலைவர் பாரிவேந்தர், இந்திய ஹஜ் அஷோசி யேஷன் தலைவர் ஏ.அபுபக் கர் ஆகியோரும் ரம்ஜான் வாழ்த்து தெரிவித்துள்ளனர். #Ramadan
ரம்ஜான் பண்டிகையையொட்டி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
உலகமெல்லாம் வாழ்கின்ற இஸ்லாமியப் பெருமக்கள், மாதங்களில் உன்னதமான ரமலான் மாதத்தில் 30 நாள்களும் உண்ணாமல் அருந்தாமல் பசி தாகம் பொறுத்து, புலன்களை இச்சைகளை கட்டுப்படுத்தி மேற்கொள்கின்ற தவத்தின் நிறைவு நாள்தான் விண்ணில் பிறை தோன்றும் ஈகைத் திருநாளாம் ரமலான் ஈது பெருநாள் ஆகும்.
அனைத்து சமயத்தினரும் ஒருவருக்கொருவர் இணக்கமாக பரிவுடன் சகோதரத்துவத்தை வளர்ப்பதுதான் இந்திய நாட்டின் ஜனநாயகத்தைக் காக்கும் அரண் ஆக அமையும். சமய நல்லிணக்கத்தைக் கட்டிக் காக்க அனைவரும் உறுதி கொள்வோம்.
தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கூறியதாவது:-
இறைவனை வணங்கி, இல்லாதோருக்கு வழங்கி, எல்லா மக்களுடனும் இணங்கி வாழும் இஸ்லாமியப் பெருமக்கள் நபிகள் நாயகம் வாழ்ந்து காட்டிய சமாதானம், சமத்துவம், சகோதரத்துவம், சகவாழ்வு ஆகிய வாழ்வு வழிமுறைகளை பின்பற்றி இன்று போல் என்றும் இன்புற்று வாழ பிரார்த்திக்கிறேன்.
நோன்பு உடலையும், உள்ளத்தையும் புனிதமாக்குகிறது. இப்புனித நாளில் இஸ்லாமிய பெருமக்கள் அனைவரின் வாழ்விலும் நலமும், வளமும் பெருகிட அனைவருக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி சார்பிலும், என் சார்பிலும் இனிய ரமலான் நல்வாழ்த்துக்களை உளமாற தெரிவித்துக் கொள்கிறேன்.
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ்:-
இஸ்லாத்தின் புனிதமான 5 கடமைகளில் முக்கியமானது ரமலான் மாதம் முழுவதும் சூரிய உதயம் முதல் மறைவு வரை மேற்கொள்ளப்படும் நோன்பு ஆகும். இதே போல் நோன்பிருக்கும் போது கடைபிடிக்கப்படும் மற்ற வழக்கங்களும் மனிதர்களை மேன்மை படைத்தவர்களாக மாற்றுகின்றன.
உலகில் அமைதி, வளம், சகோதரத்துவம் மற்றும் நல்லிணக்கத்தை பெருக் கவும், தீமைகளை ஒழித்து, நன்மைகளை பெருக்கச் செய்யவும் பாடுபட இந்நன்னாளில் அனைத்து மக்களும் உறுதியேற்போம் என்று கூறி மீண்டும் ஒருமுறை வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
முன்னாள் மத்திய மந்திரி அன்புமணி ராமதாஸ்:-
ஈகைத் திருநாளாம் ரமலான் திருநாளைக் கொண்டாடும் உலகெங்கும் உள்ள இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் எனது உளமார்ந்த நல் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ரமலான் மாதத்தில் தங்களை வருத்திக் கொண்டு நோன்பிருப்பதன் மூலம் தன்னடக்கம், வெகுளாமை, நாவடக்கம், உணவுக்கட்டுப் பாடு, சமூக நலம் பேணு தல் போன்ற நல்ல விளைவு கள் ஏற்படுகின்றன. ஒவ்வொரு திருநாளும் என்ன நோக்கத் திற்காக கொண்டாடப் படுகின்றனவோ, அதை உணர்ந்து அந்த நோக்கத்திற்கு வலு சேர்க்கும் வகையில் நடந்து கொள்வது தான் நமது கடமையாக இருக்க வேண்டும்.
மனித நேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் கே.எம்.காதர் மொகிதீன் உள்பட பலர் ரம்ஜான் வாழ்த்து தெரிவித்துள்ளனர். #ramadan
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்